‘கூலி’ திரைப்படத்தின் முன்னோட்ட டீசர் வெளியான நிலையில், அதில் இடம்பெற்றுள்ள பாடல் காப்பியடிக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
‘கூலி’ திரைப்படத்தின் முன்னோட்ட டீசர் ‘அரங்கம் அதிரட்டும், விசில் பறக்கட்டும்’ என்கிற வரிகளுடன் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அந்த டீசருக்காக அமெரிக்க ராப் பாடகர் லில் நாஸ் எக்ஸ் என்பவரின் ‘இன்டஸ்ட்ரி பேபி’ பாடலை, அனிருத் காப்பியடித்திருப்பதாக, சமூக வலைத்தளத்தில் ஆதாரத்துடன் பலரும் கூறி வருகின்றனர்.