சென்னை அடுத்த மறைமலை நகரில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைமலர் நகர் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகரைச் சேர்ந்த நண்பர்களான விமல், ஜெகன் ஆகியோர், சக நண்பரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது, கஞ்சா போதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் விமலும், ஜெகனும் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டனர்.
இதில், விமல் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், படுகாயமடைந்த ஜெகன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.