பொக்ரான் சோதனைக்கு வழிவகுத்த நமது விஞ்ஞானிகளின் விதிவிலக்கான முயற்சிகளைப் பெருமையுடன் நினைவு கொள்வதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நமது வாழ்வில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இந்தியா வணக்கம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், 1998ஆம் ஆண்டு வெற்றிகரமான பொக்ரான் சோதனைக்கு வழிவகுத்த நமது விஞ்ஞானிகளின் முயற்சிகளைப் பெருமையுடன் நினைவு கூர்வதாகவும், இது இந்திய வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணம் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.