மெய்யழகன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரேம் குமாரின் கனவு வாகனமான வெள்ளை நிற மஹிந்திரா தார் காரை, நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளனர்.
இந்த வகை காருக்காக நீண்ட நாள் காத்திருந்ததாகவும், சலிப்பாகி வேண்டாம் எனத் தானே முடிவெடுத்தபோதும், சூர்யாவின் தொடர் தேடுதலால் இந்த கார் கிடைத்ததாகவும் பிரேம்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.