இந்தியாவில் 23 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பதைப் பாகிஸ்தான் மறந்துவிடுகிறது என AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதத்தின் அடிப்படையில் இந்தியாவைப் பிரிக்கப் பாகிஸ்தான் விரும்புகிறது எனத் தெரிவித்தார்.
இந்திய முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் இங்குள்ள பிற சமூகங்களிடையே மேலும் உராய்வுகளை உருவாக்கவும் பாகிஸ்தான் விரும்புவதாகத் தெரிவித்தார்.
மேலும், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை மறைக்க இஸ்லாத்தை ஒரு முகமூடியாக மட்டுமே பாகிஸ்தான் அரசு பயன்படுத்துவதாகவும் அசாதுதீன் ஓவைசி கூறினார்.