கீழே விழுந்து கிடக்கும் ஏவுகணைகள் அல்லது டிரோன்களை பார்க்க மக்கள் செல்ல வேண்டாம் எனப் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து மொஹாலியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், கீழே விழுந்துள்ள ஏவுகணைகள் அல்லது டிரோன்கள் செயலிழக்காமல் இருக்கும் என்பதால், அதனைக் கண்டால் போலீசார் அல்லது ராணுவத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும், ராணுவம் விரும்பும் தேவைகளைப் பஞ்சாப் மாநில அரசு நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.