ஆபரேஷன் சிந்தூரின் செயல்பாடுகள் இன்னும் முடியவில்லை என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆப்ரேஷன் சிந்தூரில் ஒதுக்கப்பட்ட பணிகளைத் துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூரின் செயல்பாடுகள் இன்னும் முடியவில்லை என்பதால், சரியான நேரத்தில் விரிவான விளக்கம் தரப்படும் என்றும் இந்திய விமானப்படை குறிப்பிட்டுள்ளது.
மேலும் தவறான தகவல்களையும், யூகங்களையும் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் விமானப்படை வேண்டுகோள் விடுத்துள்ளது.