கவர்ச்சி நடிகை என்ற பிம்பத்தில் தான் சிக்கிக் கொண்டிருப்பதாக நடிகை கேத்தரின் தெரெசா கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், படங்களில் ஒரு நடிகையாக, தான் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டிருப்பதாக உணர்வதாகக் கூறியுள்ளார்.
பல்வேறு மொழிகளில், கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கவர்ச்சி நடிகை என்ற பிம்பத்தில் தான் சிக்கியிருப்பதாகவும், அந்த பிம்பத்தை மறைக்க தனக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் கூறியிருக்கிறார்.