சென்னை வளசரவாக்கத்தில் பங்களாவில் வசித்துவந்த முதிய தம்பதியர் தீவிபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியில் உள்ள பங்களாவில் நடராஜன் – தங்கம் தம்பதியர் வசித்து வந்துள்ளனர்.
வீட்டில் மின்கசிவு காரணமாகத் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் தம்பதியர் சிக்கித் தவித்தனர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டில் இருந்த தம்பதியர், உடல் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
தீ விபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த பணிப்பெண் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.