சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் சென்றனர்.
நேற்று இரவு 8.47 மணிக்கு தொடங்கிய சித்ரா பவுர்ணமி இன்று இரவு 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளது. இதனையொட்டி, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலைக்கு வரும் 9 சாலைகளில் 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள், 73 பகுதிகளில் கார் நிறுத்தும் இடங்கள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.