சேலத்தில் பட்டப்பகலில் வயதான தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் பாஸ்கரன், வித்யா தம்பதி மளிகை கடை நடத்தி வந்தனர். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை மர்ம நபர்கள் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சூரமங்கலம் போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முதிய தம்பதி கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த தம்பதியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.