இன்று பிறந்த நாள் கொண்டாடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழக முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக பொதுச்செயலாளாருமான, அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு , இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.