சென்னை, திருவொற்றியூரில் 40 ஆண்டுகளுக்கு முன் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர்கள் ஒன்றிணைந்து சந்திக்கும் விழா நடைபெற்றது.
திருவொற்றியூரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கபட்ட தீப்பெட்டி தொழிற்சாலையை ஒட்டி அதன் குடியிருப்பு ஒன்று இருந்தது. இந்த குடியிருப்பில் 40 ஆண்டுகளுக்கு முன் வசித்த பலர் வாட்ஸ் அப் குழு மூலம் மீண்டும் ஒன்றிணைத்து சந்திக்கும் விழாவை நடத்தினர்.
தனியார் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்ட இவ்விழாவில் தொழிற்சாலையில் பணியாற்றிய மூத்த தொழிலாளிகளுக்கு சால்வை அணிவித்து கவிரவிக்கப்பட்டது. அப்போது பரதநாட்டியம், சிலம்பம் ,பேச்சுப்போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழா நிறைவு பெற்றது. பின்னர் அனைவரும் குழு புகைப்படம் எடுத்தும், பழைய நினைவுகளை பகிர்ந்தும் மகிழ்ந்தனர்.