மீண்டும் கொங்குப் பகுதியில் ஒரு கொடிய கொலை சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இம்முறை, சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே மளிகைக்கடை நடத்தி வந்த ஒரு வயதான தம்பதியரைப் பட்டப்பகலில் வீடு புகுந்து மர்ம நபர்கள் பலத்த ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்திருக்கிறார்கள்.
திருப்பூர், சிவகிரி கொலையாளிகள் போலவே, இன்று சேலத்திலும் இந்த கொடூரத் தாக்குதலை நிகழ்த்திவிட்டுத் தப்பிச்சென்ற கொலையாளிகள் இன்னும் பிடிபடவில்லை என்பது பேரச்சத்தைத் தருகிறது. உடனடியாக முதல்வர் ஸ்டாலின்
கொலையாளிகளைப் பிடிக்கவும், இது போன்ற சம்பவங்களைத் தடுக்கவும் அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்பதை மக்களிடம் நேரடியாகத் தெரிவிக்க வேண்டும்.
குறிப்பாக, கொங்குப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே சூழ்ந்துள்ள அச்சத்தைப் போக்கும் விதத்தில் போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.