கவின் நடித்துள்ள கிஸ் திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார். கிஸ் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான திருடி, அனிருத் குரலில் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி தெரியவந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.