சென்னையில் தனியார் உணவக திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை தேவயானி பெப்சி வேலை நிறுத்தம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார்.
அண்ணாசாலையில் தனியார் உணவக திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகை தேவயானி, நடிகர்கள் யோகி பாபு மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தேவயானியிடம், பெப்சி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்க மறுத்த அவர், நிகழ்ச்சி சார்ந்த கேள்விகளை மட்டும் கேட்குமாறு தெரிவித்தார்.