அரக்கோணத்தில் போலி பட்டா தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உள்ள ஒரு தையல் கடையில் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் சோதனை நடத்தியதில், பல்வேறு துறை அதிகாரிகளின் போலி முத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
அந்த தையல் கடை உரிமையாளர் அளித்த தகவலின் அடிப்படையில், போலி பட்டாக்களைத் தயாரித்து வந்த ராஜ்குமார் என்பவர் உள்ளிட்ட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டார்.