2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்தியாவில் நடத்த பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஐசிசி தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இறுதிப் போட்டியை நடத்துவது தொடர்பான திட்டம் பின்னர் இறுதி செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்க வாய்ப்பில்லை. ஒருவேளை பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிப் பெற்றால் போட்டியை இந்தியாவில் நடத்துவதில் சிரமம் ஏற்படும்.