சென்னை, முகப்பேரில் ஆணி பலகை மீது நின்றபடி அம்புகளை எய்து சாதனை படைத்த சிறுவனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
முகப்போரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் நிதீஷ் என்பவர் சிறு வயதில் சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதுவரை 3 உலக சாதனைகளைப் படைத்த சிறுவன் நிதீஷ் வில்வித்தையில் கடந்த 2 ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று வருகிறார்.
6 வயதே ஆன இவர் ஆணி பலகையின் மீது ஏறி நின்று 60 அம்புகளை இலக்கை நோக்கி எய்தினார்.
6 நிமிடங்கள் 6 நொடிகளில் இவர் செய்த சாதனையைப் பாராட்டி, உலக இளம் சாதனையாளர் புத்தகம் சான்றிதழ் மற்றும் வெற்றிக் கோப்பையை வழங்கி கவுரவித்தது.
அப்போது பேசிய சிறுவன் நிதீஷ் வரும் காலத்தில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிவதே தனது விருப்பம் எனத் தெரிவித்தார்.