ஜேஎஸ்டபிள்யு எம்ஜி மோட்டார் இந்தியா இறுதியாக Windsor EV Pro-வை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த லாங்-ரேஞ்ச் மாடல் இந்தியாவில் 17 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு அறிமுக விலை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும் என்றும், முதல் 8,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய மின்சார வாகனம் பெரிய 52.9 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 449 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்.