ஆசஸ் நிறுவனம் அதன் புதிய விவோபுக் S14 மற்றும் விவோபுக் S14 ஃபிளிப் லேப்டாப்-ஐ சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய விவோபுக் S சீரிஸ் லேப்டாப்கள் இன்டெல் UHD கிராபிக்ஸ் கொண்ட 13 ஜென் இன்டெல் கோர் i5 ப்ராசசரால் இயக்கப்படுகின்றன.
மேலும், இவை 16GB ரேம் உடன் வருகிறது. இந்த இரண்டு லேப்டாப்களும் 14 இன்ச் ஸ்கிரீன்களையும், விண்டோஸ் 11 இயங்கு தளத்தையும் கொண்டுள்ளன.
இந்தியாவில் ஆசஸ் விவோபுக் S14 ஆனது 67 ஆயிரத்து 990 ரூபாய் விலையில் தொடங்குகிறது. அதேசமயம், ஆசஸ் விவோபுக் S14 ஃபிளிப் ஆனது 69 ஆயிரத்து 990 ரூபாய் விலையில் தொடங்குகிறது. இரண்டு லேப்டாப்களும் கூல் சில்வர் வண்ண வகைகளில் கிடைக்கின்றன.