கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF - உலக நாடுகள் அதிர்ச்சி!
Sep 27, 2026, 09:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF – உலக நாடுகள் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
May 12, 2025, 02:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும்  மீறி பாகிஸ்தானுக்கு  8,542 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு IMF ஒப்புதல் அளித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

நெருக்கடியில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் பாகிஸ்தான், சர்வதேச நிதி ஆணையத்தில்  கடன் கேட்டிருந்தது. இது தொடர்பான சர்வதேச நிதி  ஆணைய கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது.

IMF நிதியைப் பாகிஸ்தான் எப்போதுமே முறையாகப் பயன்படுத்தியதில்லை. மேலும், கடன்பெறும்  நிதியைப் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்குப் பயன்படுத்தக் கூடும் என்று இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் பாகிஸ்தானுக்குக் கடன் வழங்குவது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு 8542 கோடி ரூபாய் கடன் வழங்க IMF ஒப்புதல் வழங்கி உள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் கடன் நிதி, ஜம்மு காஷ்மீரை அழிக்கும் பயங்கர வாதத்துக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா,சர்வதேச நிதி ஆணையத்தின் இந்த முடிவைக் கண்டித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் நாடு தத்தளிக்கும்போதே, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. IMF-ன் கடன் ஒப்புதல் கையெழுத்தின் மை காய்வதற்குள், இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

மேலும், ரஜோரி, பூஞ்ச், உரி, டாங்தார், உட்பட ஜம்மு காஷ்மீரில் உள்ள பல பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துமீறும் பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

1958-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சர்வதேச நிதி ஆணையத்திடம் கடன் வாங்கி வருகிறது. 1989 ஆம் ஆண்டில் இருந்து கிட்டத் தட்ட 35 ஆண்டுகளில் 28 ஆண்டுகள் IMF பாகிஸ்தானுக்குக் கடன் வழங்கியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாகிஸ்தானின் 4 முக்கிய திட்டங்களுக்கு IMF கடன் வழங்கியுள்ளது. ஏற்கெனவே வாங்கிய நிதியில் குறிப்பிட்ட திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி இருந்தாலே, இன்னொரு முறை   கடன் கேட்கும் நிலைக்குப் பாகிஸ்தான் வந்திருக்காது.

தொடர்ந்து கடன் பெற்றுவரும் பாகிஸ்தான், மீண்டும் மீண்டும் பொருளாதார சரிவைச் சந்தித்து, கடனைத் திரும்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது. பாகிஸ்தானின் அரசில்  இராணுவத்தின் தலையீடு அதிகமாக உள்ளது. நாட்டில் எந்த பொருளாதார செயல் திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை. பாகிஸ்தானின் மொத்த பட்ஜெட்டில் ராணுவத்திற்கான  செலவுகளே  அதிகமாகும். இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் ராணுவத்துக்கான ஒதுக்கீட்டைப் பாகிஸ்தான் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து, உலகளாவிய பயங்கரவாதத்துக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானுக்கு இவ்வளவு பெரிய நிதி கிடைத்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிதியை வைத்துக் கொண்டு,   இந்தியாவுக்கு எதிரான போரைப் பாகிஸ்தான் தீவிரப் படுத்தும் வாய்ப்புள்ளதாக  புவிசார் அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags: shocking the worldஉலக நாடுகள் அதிர்ச்சிIMFtamil janam tvIndia opposes IMF loan to PakistanPakistan received a loan by begging: IMF milks the snake
Share
Tweet
SendShare
Previous Post

ஆசஸ் விவோபுக் S14, விவோபுக் S14 ஃபிளிப் அறிமுகம்!

Next Post

ஈரோடு : விடுமுறை தினத்தையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies