கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் சுற்றுலாப் பயணிகள் காயம் அடைந்தனர்.
பந்தளம் சந்திப்பில், ஊட்டியில் இருந்து அட்டிங்கலுக்கு சென்ற சுற்றுலா பேருந்தும், மற்றொரு தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகின.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் பலத்த சேதமடைந்த சுற்றுலா பேருந்தின் முன் பகுதியைப் பிரித்து பயணிகளை வெளியேற்றினர். விபத்துக்கான காரணம் குறித்து அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.