பாகிஸ்தான் பிடியில் உள்ள தனது கணவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கும்படி மேற்கு வங்க BSF வீரர் பூர்ணம் யாதவின் மனைவி ரஜனி இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் அருகே கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரர் பூர்ணம் யாதவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தனது கணவரை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பூர்ணம் யாதவின் 7 மாத கர்ப்பிணி மனைவி ரஜனி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.