மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவார் நினைவு வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். விகாஸ் வர்க இரண்டாம் ஆண்டையொட்டி பயிற்சி முகாம் நடைபெற்றது.
ரேஷிம்பாக் வளாகத்தில் உள்ள மஹரிஷி வியாஸ் மண்டபத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச் செயலாளர் மற்றும் முகாம் பாதுகாவலர் ஆலோக் குமார் உள்ளிட்ட பலர், பாரதமாதாவின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செய்து தொடங்கி வைத்தனர். 25 நாட்கள் நடைபெறும் முகாமில் நாடெங்கிலும் இருந்து 840 கார்யகர்த்தர்கள் பயிற்சி பெற வந்துள்ளனர்.