தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விளாத்திகுளம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த அடையாளங்களை கைபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 7 ஆண்டுகளாகியும் குற்றவாளிகளைப் பிடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்த நிலையில், புதிய ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டதில் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன், கருப்பசாமி உட்பட 4 பேர் இணைந்து பொன்னுச்சாமியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.