நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பூச்செடி வளர்ப்பது தொடர்பாக இருவீட்டாரிடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
காமராஜர் நகரை சேர்ந்த சந்திரன் என்பவருக்கும், அவரது அண்டை வீட்டை சேர்ந்த பிரம்மன் என்பவருக்கும் செடி வளர்ப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதில் சந்திரன் மற்றும் அவரது மகனை, பிரம்மனின் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.