சாதியை காரணம் காட்டி, கோயில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் இன்னொரு வடிவம் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
குன்றத்தூரில் உள்ள திருநாகேஸ்வரர் கோயிலில் குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் மட்டுமே நன்கொடை வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கானது நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்ததையடுத்து, சாதியை காரணம் காட்டி நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் இன்னொரு வடிவம் என தெரிவித்தார். மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.