சென்னை தியாகராய நகரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ரங்கநாதன் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல ஜவுளிக்கடையிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர், இரண்டரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.