நீலகிரி மாவட்டம் உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெற்று வந்த ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உதகையில் உள்ள அரசு பூங்காவில் 20ஆவது ரோஜா கண்காட்சி கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இதில் 2 லட்சம் ரோஜா மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த கடல்வாழ் உயிரினங்களின் உருவங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
நேற்று மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பாக ரோஜா மலர்களைக் காட்சிப்படுத்திய போட்டியாளர்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும், சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலியாக ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.