தோனி எந்த அணியில் விளையாடினாலும் அந்த அணி தனக்குப் பிடிக்கும் என நடிகை மீனாட்சி சவுத்ரி தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மீனாட்சி சவுத்ரியிடம் உங்களுக்குப் பிடித்த ஐபிஎல் அணி எது என்று கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், ஐபிஎல்லில் குறிப்பிட்டு இந்த அணியைத்தான் பிடிக்கும் என்பதெல்லாம் இல்லை எனவும், ஆனால் தோனி என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறினார்.
மேலும், தோனியைப் பிடிக்க ஆரம்பித்ததாலேயே தான் கிரிக்கெட்டைப் பார்க்கத் தொடங்கினேன் எனவும் அவர் தெரிவித்தார்.