மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் வெளியான ‘தொடரும்’ திரைப்படம் உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தருண் மூர்த்தி இயக்கத்தில் வெளியான நடிகர் மோகன்லாலின் 360-வது படமான ‘தொடரும்’ திரைப்படம், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், இத்திரைப்படம் உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ள நிலையில், அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.