பயனர்கள் தரவுகளைக் கசியவிட்டதற்காகக் கூகுள் நிறுவனம் 11 ஆயிரத்து 950 கோடி ரூபாயை அபராதமாகச் செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து கூகுள் தனது தயாரிப்புகள் மூலம், பயனர்களின் நடமாட்டம், ஆன்லைன் தேடல்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களைப் பல ஆண்டுகளாகக் கசியவிட்டதற்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்றதாக டெக்சாஸ் மாகாண அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் தெரிவித்தார்.
வருங்காலங்களில் தனியுரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு பலப்படுத்தப்படும் என்று கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜோஸ் காஸ்டனெடா தெரிவித்துள்ளார்.