2024-25-ம் ஆண்டுக்கான லா லீகா லீக் போட்டியில் ரியல் மேட்ரிட் அணியை வீழ்த்தி பார்சிலோனா அணி திரில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்குமிடையே பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், ரியல் மேட்ரிட் அணி வீரர் கைலியன் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து பார்சிலோனா அணிக்காக ரஃபின்ஹா இரு கோல்களையும், லாமின் யமல் மற்றும் எரிக் கார்சியா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இதன் மூலம் 4-3 என்ற கோல் கணக்கில் வென்ற பார்சிலோனா அணி, புள்ளிப் பட்டியலில் நடப்பு சாம்பியனான ரியல் மேட்ரிட்டை விட 7 புள்ளிகள் அதிகம் பெற்று வலுவான நிலையில் உள்ளது.