உத்தரப்பிரதேசத்தில் பிறந்த 17 குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.
இதில் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவத்தினர் உட்பட 140 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை என்றென்றும் நினைவுகூறும் வகையில், உத்தரப்பிரதேசத்தின் குஷி நகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ‘சிந்தூர்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர்.