ஆர்.சி.பி. அணி வீரர் ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்த நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் விரைவில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடத்தப்பட வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
அதனால் நாடு திரும்பிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைத் திரும்ப அழைக்கும் பணியில் அந்தந்த அணி நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக ஆர்சிபி வீரர் ஜோஷ் ஹேசில்வுட், இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.