இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் இடையே கடும் போட்டி நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. ஜூன் 20-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் தொடங்கவுள்ளது.
டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில், அடுத்த அணித்தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்பட தேர்வு குழுவிடம் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அடுத்த கேப்டனாக சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவர் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.