டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து, அத்துமீறல்கள் நடைபெறாமல் தவிர்க்கப் பாகிஸ்தானை இந்திய ராணுவம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
இந்நிலையில், முப்படை தளபதிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைப் பகுதிகளின் தற்போதைய நிலைமை குறித்துக் கேட்டறிந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முப்படை தலைமை தளபதி, பாதுகாப்புத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.