பெண்கள் தங்கள் இன்னல்களைப் பகிர்ந்து கொள்ளத் தனி ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அவருடன் நமது செய்தியாளர் நாகராஜன் நடத்திய கலந்துரையாடலை காணலாம்,
பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் பொள்ளாச்சி வழக்கில் பெண்கள் மிகத் துணிச்சலாகச் சாட்சி வழங்கியுள்ளனர் என தமிழிசை கூறினார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொழில்நுட்பம் நன்றாகச் செயல்பட்டுள்ளது என்றும் சீரழிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்வு வழங்கப்பட்டுள்ளது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
ஆயுள் இருக்கும் வரை ஆயுள் தண்டனை வழங்கி இருப்பது திருப்தி என்றும் வயதை வைத்து சலுகை வழங்க வேண்டும் என்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.
குற்றவாளிகள் தப்பிப்பதற்கு சூழலை ஏற்படுத்தி விடாமல் இருக்க வேண்டும் என்றும் பெண் குழந்தைகள் குற்றம் செய்தால் கண்டிக்கின்றனர், ஆண்களைக் கண்டிக்க மறுக்கின்றனர் என்று தனது ஆதங்கத்தை தமிழிசை சௌந்தரராஜன் வெளிப்படுத்தினார்.
பெண்கள் தங்கள் இன்னல்களை பகிர்ந்து கொள்ள ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஆளும் கட்சி திமுக இதற்கு உரிமை கொண்டாடும் நிலையில், அண்ணா பல்கலை. வழக்கின் பின்னணி என்ன ஆயிற்று? என கேள்வி எழுப்பியவர், “யார் அந்த சார், யார் அந்த கார் என கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்கும் சூழல் தான் இருக்கிறது என அவர் கூறினார்.
எம்எல்ஏ, எம்பிக்கள் தங்கள் பகுதியில் இதுபோன்ற பிரச்சனைகளைக் கவனிக்க வேண்டும் என்றும் பெண்கள் பாதிப்புக்குப் போர் கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று தமிழிசை வலியுறுத்தினார்.