சென்னையில் பாஜக சார்பில் நாளை ‘தேச ஒற்றுமை காப்போம்’ பேரணி நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி.
சென்னையில் நாளை ‘தேச ஒற்றுமை காப்போம்’ பேரணி நடத்தப்படும் என்றும் பஹல்காம் தாக்குதலில் பெண்கள் வடித்த கண்ணீருக்கு நீதியை நிலைநாட்டியுள்ளார் பிரதமர் மோடி என நயினார் நாகேந்திரன் கூறினார்.
நாளை மாலை 4 மணிக்கு மூவர்ணக் கொடி ஏந்தி ஒற்றுமை பேரணி நடத்தப்படும் என்றும் சித்ரா திரையரங்கம் அருகில் தேச ஒற்றுமை காப்போம் பேரணி நடைபெறும் என்றும் கட்சி பேதமின்றி மூவர்ணக் கொடி பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.