பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் ஆகிய 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்த நிலையில், பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், கள்ளச்சாராயம் குடித்தவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று விசாரித்து வருவதாகவும் போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.