ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் இன்று ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட 5 நகரங்களுக்கான விமானச் சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.
போர் பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ஸ்ரீநகர், அமிர்தசரஸ், சண்டிகர், ராஜ்கோட், லே ஆகிய நகரங்களுக்கான விமானச் சேவையை ரத்து செய்வதாக ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பயணிகள் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் சிரமத்திற்கு வருந்துவதாகவும் அந்நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.