அரசியல் கட்சி பிரமுகரின் இறுதிச் சடங்கிலேயே தாங்கள் கலந்துகொண்டதாகவும், அவர் பயங்கரவாதி அல்ல என்றும் பாகிஸ்தான் ராணுவம் விளக்கமளித்துள்ளது.
இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில், பாகிஸ்தான் ராணுவத்தினர் கலந்துகொண்டதாகப் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர், உயிரிழந்த ஹபீஸ் அப்துல் ரவூஃப் பயங்கரவாதி அல்ல எனவும், பாகிஸ்தான் மர்காசி முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர் என்றும் கூறி அவர் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அதே சமயம் கொல்லப்பட்ட ஹபீஸ் அப்துல் ரவூஃப்-ஐ அமெரிக்கா லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தலைவர் எனக் குறிப்பிட்டு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.