அமெரிக்காவின் கடைசி பணய கைதியான ராணுவ வீரரை ஹமாஸ் விடுவித்துள்ளதை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போரின்போது இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பால் 200-க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்து வந்த நிலையில், அவர்களிடம் இருந்த கடைசி அமெரிக்கப் பணய கைதியான ஈடன் அலெக்சாண்டரையும் ஹமாஸ் விடுவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த விடுவிப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.