உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்.
ரஷ்யா – உக்ரைன் நாடுகளிடையே கடந்த 3 ஆண்டுகளாகப் போர் நீடித்து வருகிறது. ரஷ்யா விடுத்த அமைதி பேச்சுவார்த்தை அழைப்பை மறுத்த உக்ரைன் போர் நிறுத்தத்தை அறிவிக்க வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே ரஷ்யா நகரங்களில் உக்ரைன் தொடர் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வந்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் தலைநகரில் ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.