போர் நிறுத்தம் குறித்த அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதால் இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என கூறிய அவர், பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களை நிறுத்தும் வரை சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்தார்.
இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்திற்காக பயங்கரவாத முகாம்கள் அழிக்ககப்பட்டதாக தெரிவித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், பயங்கரவாதிகள் மீதான தாக்குதலின்போது பாகிஸ்தான் ராணுவம் குறுக்கிட்டாலும் தாக்குதல் தொடரும் என எச்சரிக்கை விடுத்தார்.
போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்துதான் முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டது என்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்கினால், இந்தியா உரிய பதிலடி கொடுக்கும் என எச்சரித்தார்.
மேலும், போர் நிறுத்தம் குறித்த அமெரிக்கா உடனான பேச்சு வார்த்தையின்போது வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.