ஏர்டெல் மற்றும் ஜியோ தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்தனர்.
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை வழங்குவதில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை சென்னை, மதுரை, கோவை, தஞ்சை, தென்காசி, நாகை உள்ளிட்ட நகரங்களில் இரு நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டது.
சிக்னல் கிடைக்காததல் யாரையும் தொடர்புகொள்ள முடியாமல் ஏர்டெல், ஜியோ வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதேபோல குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏர்டெல் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.