உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய் பதவியேற்றார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இதன் மூலம் நீதித்துறைக்கு தலைமை தாங்கும் முதல் புத்த மதத்தவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.ஆர்.கவாய்க்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைததார்.
நிகழ்ச்சியில் பிரதமர நரேந்திர மோடி, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.