அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா பெயர் மாற்றம் செய்யும் முயற்சிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அருணாச்சலப் பிரதேசத்தில் இடங்களுக்குப் பெயர் மாற்ற சீனா மேற்கொண்ட வீண் மற்றும் அபத்தமான முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது , இருக்கிறது, எப்போதும் இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த யதார்த்தத்தை இதுபோன்ற சூழ்ச்சிகள் என்றும் மாற்றாது என்றும் அவர் தெரிவித்தார்.