ராஜபாளையம் அருகே தனியார் பேருந்து ஓட்டுநரை இளைஞர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. சங்கரன்கோவில் மூக்கு பகுதியை கடந்தபோது சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது மோதும் விதமாகக பேருந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் தனியார் பேருந்தை விரட்டி சென்று ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் பாதுகாப்பில் இருந்த போலீசார், இளைஞர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருப்பினும், இளைஞர்கள் தனியார் பேருந்தை துரத்தி சென்று ஓட்டுநரை தாக்கியுள்ளனர்.